"ரோகித், கோலி சாதித்ததை மறந்து விமர்சிக்காதீர்" - முன்னாள் வீரர் யுவராஜ் சிங் ஆதங்கம்
ரோகித் சர்மா, விராட் கோலி சாதித்ததை ரசிகர்கள் மறந்துவிட்டு விமர்சிப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் ஆதங்கப்பட்டுள்ளார். ரோகித்தும், கோலியும் தனது சகோதரர்கள் என குறிப்பிட்ட அவர், மோசமாக விளையாடும்போது, அவர்களை கடுமையாக விமர்சிப்பது ரசிகர்களுக்கு எளிதாக இருந்தாலும், சகோதரர்களுக்கு ஆதரவாக இருப்பதே தனது கடமை என தெரிவித்துள்ளார். ரோகித், கோலி படைத்த சாதனைகளை மறந்துவிட்டு, அவர்களின் மோசமான செயல்பாடு பற்றி மட்டுமே பேசிவருவதாகவும் யுவராஜ் சிங் ஆதங்கப்பட்டுள்ளார்.