சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றுள்ள இந்திய வீரர் தினேஷ் கார்த்திக், தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடரில் பார்ல் ராயல்ஸ் (PAARL ROYALS) அணிக்காக விளையாடவுள்ளார். இதன்மூலம் தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடரில் பங்கேற்கும் முதல் இந்தியர் என்ற பெருமையை தினேஷ் கார்த்திக் பெற்றுள்ளார். இந்த தொடர் வரும் ஒன்பதாம் தேதி தொடங்கவுள்ள நிலையில், பார்ல் ராயல்ஸ் அணியுடன் இணைந்துள்ள தினேஷ் கார்த்திக், விக்கெட் கீப்பீங் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டார்.