ஒரே மாதிரி 8 முறை அவுட்...கிரிக்கெட் கடவுள் சச்சினை வாட்டிய அதே LINE - கோலியின் பலமே, எதிரியான சோகம்

Update: 2025-01-05 07:36 GMT

பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் 8வது முறையாக ஒரே மாதிரி ஆட்டமிழந்து இருக்கிறார் விராட் கோலி... கோலிக்கு என்னதான் பிரச்சினை?... விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...

சில சமயங்களில் நமது பலமே, நமது பலவீனமாக மாறிவிடும்... நட்சத்திர வீரர் விராட் கோலிக்கும் அவரது பலமான கவர் டிரைவ் ஷாட்தான் (cover drive shot) தற்போது பலவீனமாக மாறி இருக்கிறது.

ஒரு காலத்தில் கவர் டிரைவின் காவியத் தலைவனாக கோலியை சிலாகித்த ரசிகர்கள், இன்று அதே கவர் டிரைவ் ஷாட்டிற்குத்தான் கோலியை விமர்சித்து வருகின்றனர்.

ஆம்... நடப்பு பிஜிடி தொடரில் கவர் டிரைவ் ஷாட்களுக்கு ஆசைப்பட்டு தனது விக்கெட்டை ஒரே மாதிரி தாரைவார்த்து வருகிறார் விராட் கோலி...

ப்ரீத் கோலி விக்கெட்ஸ்... OUTSIDE OFF STUMP BALLS ONGOING BGT SERIES

கோலி வந்ததும் FIFITH ஸ்டம்ப் மற்றும் SIXTH ஸ்டம்ப் லைனில் (LINE) ஆஸ்திரேலிய பவுலர்கள் பந்துவீசுகின்றனர். அவுட் சைடு ஆஃப் ஸ்டம்பில் பந்து வந்ததும் தனது டிரேட் மார்க் (trade mark)ஷாட்டான கவர் டிரைவிற்கு முற்படும் கோலி, எட்ஜ் வாங்குகிறார்.

பந்து கீப்பரிடமோ ஸ்லிப்பில் செல்வதோதான் மாறுகிறதே தவிர... ஆனால் கோலி ஆட்டமிழக்கும் விதம் ஒரே மாதிரிதான் தொடர்கதையாகி வருகிறது..

நடப்பு தொடரில் மட்டும் 9 இன்னிங்ஸ்களில் 8 முறை OUTSIDE OFF STUMP பந்தில் கோலி ஆட்டமிழந்து இருக்கிறார்.

2021ம் ஆண்டு முதல் 23வது முறையாக வேகப்பந்துவீச்சாளரிடம் கோலி இதேபோல் ஆட்டமிழந்து உள்ளார்.

ஆக்‌ஷன் ரீ-பிளேவாக விராட் கோலியின் விக்கெட் இருந்து வரும் நிலையில், கோலிக்கு என்னதான் பிரச்சினை என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

கிரிக்கெட் நிபுணர்களோ கோலி தனது பிரச்சினைக்கு தீர்வு காண, சிட்னியில் கடந்த 2004ம் ஆண்டு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்,,,,, ஒரு கவர் டிரைவ் கூட ஆடாமல் 241 ரன்கள் அடித்ததைத் தான் வழக்கம்போல் சுட்டிக்காட்டுகின்றனர்.

இப்போது கோலி தடுமாறுவதுபோல். அப்போது அவுட்-சைடு ஆஃப் ஸ்டம்ப் பந்துகளில் தடுமாறினார் சச்சின்...

சிட்னி டெஸ்ட்டில் ஒரு கவர் டிரைவிற்கு கூட முயற்சிக்காமல் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்ட சச்சின், இரட்டைச் சதமும் அடித்து தனது முத்திரை ஷாட் ஆன கவர் டிரைவ் இல்லாமலும் தன்னால் ரன்களைக் குவிக்க முடியும் என நிரூபித்துக் காட்டினார்.

கோலிக்கும் இதைத்தான் நிபுணர்கள் கூறுகின்றனர். கவர் டிரைவ் ஷாட்களை தவிர்த்துவிட்டு களத்தில் கோலி பொறுமை காட்ட வேண்டும் என்று...

அவுட் சைடு ஆஃப் ஸ்டம்ப் பந்துகளில் கவர் டிரைவிற்கு முயற்சிக்காமல் கட் (cut) ஷாட்களை கோலி தேர்வு செய்யலாம் என்றும் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

கோலி ஆட்டமிழக்கும் விதத்தில் டெக்னிக்கல் குறைகள் இருந்தாலும் அவர் மீது அவருக்கே நம்பிக்கை இல்லை என அப்பட்டமாகத் தெரிகிறது என்று சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறி இருப்பதும் கவனிக்க வேண்டிய விஷயம்...

2014ம் ஆண்டிலும் இதே மாதிரிதான் இங்கிலாந்து தொடரில் ஆன்டர்சன் வீசிய அவுட் சைடு ஆஃப் ஸ்டம்ப் பந்துகளுக்கு கோலி இரையானார்.

ஆனால் அதன்பின் தனது தவறுகளை திருத்திக்கொண்டு நாயகனாக மீண்டெழுந்தார். விமர்சனங்களுக்கு பதிலடி தந்தார்..... இப்போதும் அப்படி ஒரு மீட்சியைத் தான் கோலியிடம் எதிர்பார்க்கின்றனர் ரசிகர்கள்....

Tags:    

மேலும் செய்திகள்