ஆஸி. வீரர் சாம் கோன்ஸ்டாஸிற்கு ரோகித் எச்சரிக்கை | IND Vs AUS | Rohit Sharma
களத்தில் ஆஸ்திரேலிய வீரர் சாம் கோன்ஸ்டாஸ் தேவையின்றி பேசக் கூடாது என ரோகித் சர்மா எச்சரித்துள்ளார். பும்ரா - சாம் கோன்ஸ்டாஸ் வாக்குவாதத்தில் ஈடுபட்டது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ரோகித் சர்மா, தாங்கள் அமைதியானவர்கள் என்றும், அதே சமயம் தேவையின்றி யாராவது தங்களை சீண்டினால் அமைதியாக இருக்க மாட்டோம் என்றும் கூறினார். கிரிக்கெட்டை மட்டும் விளையாடுங்கள்... தேவையின்றி பேசாதீர்கள் என்றும் கோன்ஸ்டாஸிற்கு ரோகித் சர்மா எச்சரிக்கை விடுத்தார்.