இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சஹால் - தனஸ்ரீ தம்பதியர் விவாகரத்தா?
இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சஹால் - தனஸ்ரீ வர்மா தம்பதியர் விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சஹாலும் தனஸ்ரீயும் கடந்த 2020ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட நிலையில் இருவரும் சமீப காலமாக தனியாக வசித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இருவரும் இன்ஸ்டாகிராமில் பரஸ்பரம் UNFOLLOW செய்துள்ளனர். மேலும் தனஸ்ரீயின் புகைப்படங்களை சஹால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கியதாக தெரிகிறது. இதனால் இருவரும் விவாகரத்து பெற உள்ளனரா என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.