சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா? - பிசிசிஐ ஆலோசனை
கடந்தாண்டு டி20 உலகக்கோப்பையை வென்ற பின்னர், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து, இந்திய அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா ஓய்வை அறிவித்தார். ஆனால் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளுக்கு ரோகித் சர்மா கேப்டனாக நீடிப்பார் என அறிவிக்கப்பட்டது. சமீப காலமாக டெஸ்ட் போட்டிகளில் இந்தியா தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில், சிட்னி டெஸ்ட் போட்டியில் இருந்து ரோகித் சர்மா விலகியதால், டெஸ்டில் அவரது எதிர்காலம் கேள்விக்குறி ஆகியுள்ளது. இதைத்தொடர்ந்து ஒருநாள் போட்டியிலும் ரோகித் சர்மாவின் நிலை என்ன என்பது பேசுபொருளாக மாறியுள்ளது. ஒருவேளை ரோகித் சர்மா ஓய்வுபெற விரும்பினால், ஒருநாள் போட்டியின் அடுத்த கேப்டனாக ஹார்திக் பாண்டியாவை நியமிக்க, பிசிசிஐ பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் ரோகித் சர்மா தொடர்ந்து விளையாடும் பட்சத்தில், ஒருநாள் அணியின் கேப்டனாக அவரே தொடரலாம் என்றும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.