"முக்கிய நகரங்களில் தமிழ் வளர்ச்சி சபையை உருவாக்க வேண்டும்" - திமுக MLA மயிலை வேலு கோரிக்கை
இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்களிலும் தமிழ் வளர்ச்சி சபையை உருவாக்க வேண்டும் என மயிலாப்பூர் எம்.எல்.ஏ மயிலை வேலு கோரிக்கை விடுத்துள்ளார். சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய மயிலை வேலு, தமிழ்நாட்டில் விருப்பப்பட்டு எந்த மொழியையும் கற்கலாம் என்றும், அதை யாரும் தடுப்பது இல்லை என்றும் கூறினார். தமிழ் மொழியின் சிறப்பை வெளிமாநில மக்கள் தெரிந்துகொள்ள, டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, நாக்பூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தமிழ் வளர்ச்சி சபையை உருவாக்க வேண்டும் என்றும், அண்டை மாநில மக்களுக்கும் தமிழ் மொழியை சொல்லிக்கொடுக்க முயற்சி எடுக்கலாம் என்றும் திமுக எம்.எல்.ஏ மயிலை வேலு கூறினார்.