வணிகர்களின் கோரிக்கைகளை பூர்த்தி செய்யும் அரசியல் கட்சிக்கு ஒரு கோடி வாக்குகள் நகரும் என, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக வணிகர்களை பாதிக்கும் வெளிநாட்டு ஹைப்பர் மார்க்கெட்டுகள் அதிகளவில் திறக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். ஆன்லைன் வர்த்தகம் அதிகரிப்பதாலும், வணிகர்கள் பாதிக்கப்படுவதாக விக்கிரமராஜா கூறியுள்ளார்.