செல்வப்பெருந்தகை பதவிக்காலம் - காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் சொன்ன எதிர்பாரா பதில்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்படுபவர்கள் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் தலைவராக இருப்பார்கள், அதன்படி செல்வப்பெருந்தகை நிச்சயம் 3 ஆண்டுகள் தலைவராக நீடிப்பார் என்று காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். சென்னை தி.நகரில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், செல்வப்பெருந்தகை மீது மேலிட பொறுப்பாளரிடம் புகார் கொடுத்தது குறித்து தனக்கு தெரியாது என்று கூறினார்.