இருட்டில் திடீரென கோஷம் எழுப்பிய பாஜக.. மறுநொடி வந்த ஒளி. நின்ற கோஷம்.

Update: 2025-03-24 03:35 GMT

பொன்னேரியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தின்போது திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் திமுக அரசை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த காட்டூரில் மும்மொழி கொள்கையை ஆதரித்து பாஜக சார்பில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது. அப்போது, பாஜக நிர்வாகிகள் சிலர் பட்டாசுகள் வெடித்ததால் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் கூட்டத்தில் இருந்த பாஜகவினர் இருளில் அமர்ந்தபடியே திமுக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து சிறிது நேரம் கழித்து மின்சாரம் வந்ததையடுத்து பொதுக்கூட்டம் மீண்டும் நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்