"தெருநாய்களை கட்டுப்படுத்த ரூ.20 கோடியில் கருத்தடை மையங்கள்" - அமைச்சர் உறுதி
தெருநாய்களை கட்டுப்படுத்த 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 100 இடங்களில் கருத்தடை மையங்களை அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து இருப்பதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். தெருநாய்கள் கடித்து உயிரிழந்த ஆடு மற்றும் கோழிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்ற அறிவிப்புக்கு விவசாயிகள் சார்பில் நன்றி தெரிவிக்கும் விழா ஈரோட்டில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின் அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.