அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ், சசிகலா? - ``எத்தனை முறை சொல்வது''.. முகம் மாறி ஈபிஎஸ் சொன்ன பதில்
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மனமில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூரில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி, அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ், சசிகலாவை சேர்த்துக்கொள்ள வாய்ப்பில்லை எனக் கூறினார்.