கோவை மாவட்டம் மருதமலை முருகன் கோவிலில் தமிழில் கும்பாபிஷேகம் நடத்தக்கோரி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்தனர். அப்போது நாம் தமிழர் கட்சியினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.