"சட்டத்தின் பிடியில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது" - திட்டவட்டமாக சொன்ன முதல்வர் ஸ்டாலின்

Update: 2025-03-20 02:37 GMT

நெல்லையில் ஓய்வுபெற்ற காவல்துறை உதவி ஆய்வாளர் ஜாகிர் உசேன் கொலை வழக்கில் தீவிர விசாரணை நடைபெறுவதாகவும், சட்டத்தின் பிடியில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது என்றும், முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசிய அவர், இந்த கொலை வழக்கில் குற்றவாளிகள், அவர்களுக்கு பின்னணியில் இருந்தவர்கள் அனைவர் மீதும் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, பாரபட்சமின்றி நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்