இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மொழிகளையும் ஆட்சி மொழியாக்க தயாரா? என மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பினார். மக்களவையில் பேசிய அமித்ஷா, அனைத்து மாநில மொழிகளின் வளர்ச்சிக்காக பாஜக அரசு பணியாற்றி வருவதாக தெரிவித்தார்... அப்போது குறுக்கிட்ட வைகோ, மாநில மொழிகளை ஆட்சி மொழியாக்க தயாரா? என்று கேள்வி எழுப்பினார். மேலும், ஆங்கிலத்தை மட்டுமே தாங்கள் ஏற்றுக்கொள்வோம், ஆங்கிலமே அலுவல் மொழியாக இருக்க வேண்டும் என்றும் வைகோ திட்டவட்டமாக தெரிவித்தார்.