``விசாரணை முடியவே 1,500 ஆண்டுகளாகும்’’ - அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கில் வாதம்

Update: 2025-03-22 02:25 GMT

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்குகளை சேர்த்து விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்த மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது. மனுதாரர் தரப்பில், 2 ஆயிரத்துக்கும் அதிகமான குற்றம் சாட்டப்பட்டவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதால், விசாரணை முடிய, ஆயிரத்து 500 ஆண்டுகளாகும் என வாதிடப்பட்டது. காவல் துறை தரப்பில், குற்றச்சாட்டுக்கள் ஒரே மாதிரியானவை. வழக்குகளை சேர்த்து விசாரிப்பது என்பது சிறப்பு நீதிமன்றத்தின் முடிவு தான் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளிவைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்