ஒன்பது மாதங்கள் விண்வெளியில் சிக்கி, பூமிக்கு திரும்பிய போது புன்னகையுடன் கையைசைத்ததன் மூலம் ஆண்களை விட பெண்கள் தான் பலசாலி என்பது தெரிகிறது என முன்னாள் அமைச்ச ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். சிவகாசியில் நடந்த அதிமுக மகளிர் அணி கூட்டத்தில் பங்கேற்ற அவர், திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என குற்றம் சாட்டினார். விழாவில் கலந்து கொண்ட பெண்களுக்கு கமகம கறி விருந்து பரிமாறப்பட்டது.