"இந்தா இத ஒட்டு.." - டாஸ்மாக் முன்பு மாறி மாறி மோதிக் கொண்ட திமுக, பாஜக
சேலம் ஓமலூரில் டாஸ்மாக் கடையில் முதல்வர் போட்டோ ஒட்ட வந்த பாஜகவினர் இடமிருந்து, போட்டோவை பறித்து அண்ணாமலை போட்டோவை திமுகவினர் வழங்கியதால் இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் வாக்குவாதம் செய்து போட்டோக்களை மாறி மாறி பறித்து கொண்டு, வாக்குவாதம் செய்தனர். முதல்வர் போட்டோவை பறித்து சென்ற திமுகவினரை கைது செய்யுமாறு பாஜகவினர் முழக்கமிட்டதால் டாஸ்மாக் கடைமுன் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.