``1 ரூபா கூட இல்ல.. அப்புறம் எப்படி லேப்டாப்?'' - அண்ணாமலை கேள்வி

Update: 2025-03-22 02:36 GMT

மக்களிடம் வெறும் கையில் முழம் போடுவதை திமுகவினரிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும் என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வாங்க இந்த ஆண்டு ரூ. 2,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக, சட்டசபையில் நிதியமைச்சர் கூறியிருக்கிறார். ஆனால், உயர்கல்வி மானியக் கோரிக்கையிலோ அல்லது தகவல் தொழில்நுட்பவியல் துறை மானியக் கோரிக்கையிலோ இந்தத் திட்டத்திற்கு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கப்படாமல் உள்ள நிலையில், எந்த நிதியை வைத்து மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்போகிறார் எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்