மதுவிலக்கு குறித்து தங்கமணி கேட்ட கேள்வி - நச் பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படுமா? என முன்னாள் அமைச்சர் தங்கமணி கேள்வியெழுப்பியுள்ளார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, பேசிய தங்கமணி திமுக தனது தேர்தல் வாக்குறுதியில், படிப்படியாக டாஸ்மாக் கடைகளை மூடுவோம் என்று கூறியதாகவும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படுமா? என்பதை விளக்க வேண்டும் எனவும் கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த காலங்களில் துறையினுடைய அமைச்சராக இருந்த தங்கமணி மதுவிலக்கு குறித்து என்ன பேசினீர்கள் என்ற குறிப்பை, தான் கையில் வைத்திருப்பதாகவும், அதைப் பற்றி எல்லாம் இப்போது பேச வேண்டாம் என்றும் குறிப்பிட்டார்.