தமிழகத்தில் 7 ஆயிரத்து 900 அங்கன்வாடி மைய பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாக, அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார். சட்டப்பேரவையில் இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், சத்துணவு பணியாளர்களை தேர்வு செய்ய அரசாணை பிறபிக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் ஒரு மாதத்தில் 7 ஆயிரத்து 900 அங்கன்வாடி பணியாளர்கள், 8 ஆயிரத்து 917 சத்துணவு சமையலர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டார்.