``இந்தியாவிலேயே முதன்முறையாக.. இன்னும் பத்தே நாட்களில்..’’ - மா.சுப்பிரமணியன் வாக்குறுதி

Update: 2025-03-24 08:19 GMT

அனைத்து புற்றுநோய்களையும் பரிசோதனை செய்யும் வகையிலான ஒரு திட்டம், இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சட்டப்பேரவையில் இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், தமிழ்நாடு முழுவதும் உள்ள வருவாய் மாவட்டங்களில், கருப்பை வாய் புற்றுநோய், வாய் புற்று நோய் என்று அனைத்து புற்றுநோய்களையும் பரிசோதனை செய்யும் வகையில் ஒரு திட்டம், இன்னும் 10 நாட்களில் தொடங்கப்பட உள்ளதாக குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்