இந்தி இந்துத்துவ கட்சியான பாஜகவை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். சென்னை பல்லாவரத்தில் நடைபெற்ற ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், என்ன குட்டிக்கரணம் அடித்தாலும்,தமிழக மக்கள் பாஜகவை நிகராகரித்துக் கொண்டே தான் இருப்பார்கள் என்றும், அவர்கள் யாரோடு கூட்டணி வைத்தாலும் அந்த கூட்டணி தோற்றுப் போகும் என்றும் கூறினார்.