பிறந்த நாளுக்காக வந்த கணவருக்கு ஷாக் சர்ப்ரைஸ்.. காதலனோடு சேர்ந்து குத்திக் கொன்ற மனைவி

- கடந்த ஒரு வாரமாக வட இந்தியாவை உலுக்கிப் போட்டிருக்கும் ஒரு கொடூர சம்பவம் தான் மீரட் கப்பல் ஊழியர் Saurabh Rajput கொலை.
- கள்ளக்காதலனோடு சேர்ந்து குத்திக் கொலை செய்து உடலை ட்ரமிற்குள் அடைத்து வைத்திருந்தார் அவரது காதல் மனைவி Muskan.
- வெற்றிகரமாக கொலை செய்து விட்டு காதலன் ஷாகிலோடு மனாலியில் லூட்டி அடித்தவரை, போலீஸார் கைதுச் செய்து அழைத்து வந்து தொடர்ந்து விசாரித்ததில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்திருக்கிறது.
- இந்த செய்தி பரவிய நாள் முதல் மொத்த ஊரும், இவர்கள் இருவரையும் மனித உருவில் இருக்கும் ஈவிலாகவே பார்த்திருக்கிறார்கள். போலீஸார் கொஞ்சம் அசந்தாலும் , ஷாகிலை அடித்தே கொலை செய்யும் அளவுக்கு பொதுமக்கள் அவர் மீது ஆத்திரத்தில் இருந்துள்ளனர்.
- என்னதான் கொலைக்கான காரணம் தெரிய வந்தாலும், இவர்களது கள்ளக்காதல் கதையை தோண்ட தோண்ட பல பகீர்
- உண்மைகள் அனுதினமும் வெளி வந்த வண்ணம் உள்ளது. அதை எல்லாம் விட தற்போது வெளி வந்திருக்கும் ஷாகிலின் அமனுஷ்ய பின்னணி இந்த கொலைக்கு பின்னால் பில்லி சூனியம் போன்ற மாந்திரீக காரணங்கள் இருக்குமோ என்ற சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது.
- பொதுவாக, ஒரு கொடூர குற்றம் என்றால் அது ஏதவது ஒரு சினிமா கதையோடோ, அல்லது சீனோடோ ஒத்து போவதாக இருக்கும்..
- ஆனால் இந்த கதை... , லவ், சஸ்பண்ஸ், ஃபேமிலி ட்ராமா, ஹாரர் மிஸ்டரி என அத்தனை ஜானர்களையும் ஒரே சம்பவத்தில் உள்ளடக்கி வைத்திருக்கிறது.
- கொல்லபட்ட Saurabh Rajput லண்டனில் கப்பலில் வேலை பார்த்து வந்திருக்கிறார். உத்திரபிரதேசம் மீரட் நகரை சேர்ந்த இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு முஸ்கான் என்ற பெண்ணை காதலித்து கரம்பிடித்தார்.
- இந்த தம்பதிக்கு 6 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
- லன்டனில் வேலை பார்த்துவந்த Saurabh Rajput. கடந்த 27 ஆம் தேதி விடுமுறையில் ஊருக்கு வந்திருக்கிறார். திடீரென மார்ச் 4 ஆம் தேதி முதல் காணாமல் போயிருக்கிறார்.
- அவரது மனைவி, அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம், நானும் கணவரும் பிக்னிக் செல்கிறோம் என சொல்லிவிட்டு மணாலி சென்றிருக்கிறார். அதே கதையை சொல்லி தான் தனது குழந்தையை தாய் வீட்டிலும் விட்டு சென்றிருக்கிறார்.
- ஆனாலும் முஸ்கானின் தாய்க்கு மகள் மீது ஏதோ சந்தேகம் எழுந்திருக்கிறது. தனது மருமகனை காணவில்லை, ஃபோன் செய்தாலும் எடுக்கவில்லை என காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.
- அந்த புகாரின் அடிப்படையில், முஸ்கானை அழைத்து போலீஸார் விசாரணை நடத்தி இருக்கிறார்கள்.
- அப்போது தான் அந்த உண்மை அம்பலமாகி இருக்கிறது.
- கணவனை கொலை செய்து உடலை ட்ரம்முக்குள் வைத்திருப்பது தெரிந்திருக்கிறது. அதோடு முஸ்கானின் காதலன் ஷாகிலையும் கைது செய்த போலீசர் விசாரணை நடத்தி இருக்கிறார்கள்.
- அவரின் வீட்டை சேதனையிட்ட போலீஸார் ஒரு கனம் ஆடி போயிருக்கிறார்கள். ஜாடா முடியுடன் சுற்றிய ஷாகில், வீட்டு சுவற்றில் அமானுஸ்ய படங்களை வரைந்து வைத்திருக்கிறார்.
- அதோடு, மற்றொரு பக்கம் சிவன் படத்தையும் வரைந்து வைத்து வணங்கி இருக்கிறார். அந்த மொத்த இடமும் மாந்திரீக தன்மையோடு காட்சியளிக்க அதிர்ந்து போன போலீஸார், அவரை பற்றிய தகவல்களை திரட்டி இருக்கிறார்கள்.
- முதலாவதாக ஷாகிலின் சாட் ஹிஸ்டரியை ஆய்வு செய்திருக்கிறார்கள். அதில் ஷாகில் அவரது தாயோடு ஸ்னாப் சார்ட்டில் அடிக்கடி மெசேஜ் செய்திருக்கிறார் அதற்கு அவரது தாயிடம் இருந்து ரிப்ளேவும் வந்திருக்கிறது. இதை பார்த்த போலீஸார் அதிர்ந்து போயிருக்கிறார்கள்.
- காரணம் அவரது தாய் 20 வருடங்களுக்கு முன்னாதகவே இறந்து போய்விட்டார்.
- மூட நம்பிக்கைகளாலும், போதை பழகத்திற்கும் அடிமையான ஷாகில் தனது தாய் உயிரோடு இருப்பது போல அவரே ஒரு அக்கவுண்ட்டை ஓப்பன் செய்து, அதில் இருந்து தனக்கு தானே மெசேஜ் அனுப்பி இருக்கிறார்.
- இப்படி தனிமையில் தனக்கு தானே கடவுளாக வாழ்ந்து வந்த ஷாகிலின் வாழ்கையில், 2 வருடங்களுக்கு முன்னதாக தான் முஸ்கான் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். ஆம் அது ரீ என்ட்ரி தான்...
- இவர்கள் புதிதாக காதலில் விழுந்தவர்கள் அல்ல... ஒரே பள்ளியில் படித்த பப்பி லவ்வர்ஸ். ஆனால் வழக்கம் போல காலம் எனும் சூராவளி இருவரையும் திசைக்கு ஒரு பக்கமாக பிரித்து போட்டிருக்கிறது.
- இருவரின் வாழக்கையும் வெவ்வேறு பாதையில் சென்றிருக்கிறது.
- ஷாகில் ஆன்மீக அமானுஷ்யம் என ஒரு டார்க்கான உலகத்தில் நுழைந்திருக்கிறார்.
- மற்றொரு பக்கம் முஸ்கான் Saurabh Rajput ஐ காதலித்து, திருமணம், குழந்தை என நிறைவான வாழ்கையை நடத்தி வந்திருக்கிறார்.
- இப்படி காலம் பிரித்த இவர்களை பல வருடம் கழித்து இணைத்தது எது தெரியுமா.. ஸ்கூல் ஃபிரண்ட்ஸின் வாட்ஸ் அப் குரூப்.
- பழைய நண்பர்கள் ஒன்றாக சந்திப்பதற்காக உருவாக்கபட்ட வாட்ஸ் அப் குரூப் மூலமாக தான், ஷாகிலும், முஸ்கானும் மீண்டும் இணைத்திருக்கிறார்கள்.
- முதலில் ஜெண்டிலாக ஹாய் .. ஹலோ என்று தான் இருவரின் "convo" தொடங்கி இருக்கிறது. ஆனால் போக போக, அது போக கூடாத இடத்திற்கு போயிருக்கிறது.
- இருவரும் ரகசியமாக பழைய காதலை துசி தட்டி இருக்கிறார்கள்.
- அதிலும், முஸ்கான் ஷாகிலோடு நிரந்தரமாக வாழ ஆசைப்பட்டிருக்கிறார்.
- ஒரு சமயத்தில் ஷாகில் ஸ்னாப் சார்ட்டில் தாய் போல தனக்கு தானே மெஸேஜ் அனுப்பிக் கொண்டிருப்பது முஸ்கானுக்கு தெரிய வந்திருக்கிறது.
- இதனால், முஸ்கான் அவர் பங்கிற்கு ஷாகிலின் தாயார் பெயரில் ஒரு அக்கவுண்டை ஓப்பன் செய்திருக்கிறார்.
- அந்த கணக்கில் இருந்து முஸ்கான் நல்ல பெண், அவளோடு தான் நீ வாழ வேண்டும் என தனக்கு தானே புகழ்ந்து மெசேஜ் அனுப்ப, தாய் பாசத்திற்கு ஏங்கிக்கிடந்த ஷாகில், அதன் பிறகு முஸ்கானை விட்டு பிரியவே இல்லை.
- அடிக்கடி ரகசியமாக சந்தித்து காதலை வளர்த்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் முஸ்கானின் கணவர்
- Saurabh Rajput ஐ கொலை செய்ய வேண்டுமென இருவரும் முடிவெடுத்திருக்கிறார்கள்.
- ஆனால் இது எதுவும் தெரியாத Saurabh மனைவியின் பிறந்த நாளுக்காக
- பிப்ரவரி 24 ஆம் தேதி லண்டனில் இருந்து ஊருக்கு வந்திருக்கிறார். அன்று இரவே அவரின் உயிருக்கு நாள் குறித்திருக்கிறார்கள். ஆனால் அன்று எதுவும் கை கூடவில்லை.
- இந்த சூழலில் மார்ச் மூன்றாம் தேதி Saurabh Rajput-க்கு பிடித்த kofta curry சமைத்த முஸ்கான் அதில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்திருக்கிறார்.
- Saurabh அயர்ந்து தூங்கியதும், வீட்டிற்கு வந்த வந்த ஷாகில், முஸ்கானுக்கு தைரியம் கொடுக்க, கத்தியால் கணவனின் மார்பில் 3 முறை குத்தி கொலை செய்திருக்கிறார் முஸ்கான். ஷாகில் Saurabh வின் கைகளையும் தலையையும் தனியாக வெட்டி எடுத்திருக்கிறார்.
- அதன் பிறகு உடலை வீட்டிற்குள் பதுக்கிவிட்டு, கணவரோடு பிக்னிக் செல்வதாக, ஷாகிலோடு பறந்திருக்கிறார் முஸ்கான்.
- கணவனை கொன்ற சந்தோஷத்தில் இப்போது தான் தனக்கு நிஜ பிறந்த நாள் என முஸ்கான் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்.
- கணவரின் செல்ஃபோனை கையோடு எடுத்து வந்திருந்த முஸ்கான்.
- சந்தேகம் வராமல் இருக்க அவரது நம்பரில் இருந்து கணவனின் தாய் தந்தைக்கு மெசேஜ் அனுப்பியதாக சொல்லப்படுகிறது.
- அதோடு இந்த பிக்னிக் செலவுக்காக கணவனின் அக்கவுண்டில் இருந்து 1 லட்சம் ரூபாயை முஸ்கான் எடுத்திருக்கிறார்.
- ஆனால் எவ்வளவு திட்டமிட்டு செய்தாலும் ஒரு அப்பாவிக்கு இழைக்கும் துரோகம், ஒரு போதும் மறைந்து போகாது என்பது போல, முஸ்கானின் தாயாரேலேயே அந்த கொடூரம் வெளி வந்திருக்கிறது.
- முழு உடலையும் ட்ரம்மிற்குள் வைக்க முடியும் போது, ஏன் கைகளையும், தலையையும் ஷாகில் தனியாக வெட்டி எடுத்தார் என்று தெரியவில்லை. மாந்திரீகத்தில் ஈடுபாடுள்ள ஷாகில் அதை வைத்து பில்லி சூன்யம் செய்ய நினைத்தாரா எனவும் விசாரணை நடந்து வருகிறது.
- " முஸ்கான் கடந்த 2 வருடங்களாக, ஏதோ பிரச்சனையில் இருந்தார். ஆனால் அதை அவர் என்னிடம் சொல்லாமல் மறைத்துவிட்டார்.
- ஆளே மாறிப்போய், அதிகமாக எடை குறைந்து இருந்ததால், ஒரு வேளை போதை பழக்கத்திற்கு ஆளாகி இருக்கலாம் என்ற சந்தேகத்தையும் எழுப்பி இருந்தார்“
- இந்த சம்பவம் குறித்து கைதான முஸ்கானின் தந்தை பேசுகையில்,
- தனது மருமகனுக்கு நீதி கிடைக்க வேண்டும், முஸ்கானுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டுமென கூறி இருக்கிறார்.