புதுச்சேரி அண்ணாசாலையில் தள்ளு வண்டியில் பழ வியாபாரம் செய்த பெண்ணிடம் பைக்கில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் வாழைப்பழ சீப்பை பறித்து கொண்டு தப்பியோடினர். அண்ணா சாலையில் உள்ள ராஜா திரையரங்கம் அருகே ராஜாமணி என்பவர் இரவு 11:30 மணியளவில் தள்ளு வண்டியில் பழ வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.