Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (25.03.2025)| 6 AM Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (25.03.2025)| 6 AM Headlines | Thanthi TV;

Update: 2025-03-25 00:55 GMT
  • தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்க மாநிலங்கள் PM SHRI திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை... நாடாளுமன்றத்தில் மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி எழுத்துப்பூர்வமாக பதில்...
  • தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை... தேர்தல் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து ஆலோசனை எனத் தகவல்....
  • தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை.... தேர்தல் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து ஆலோசனை எனத் தகவல்....
  • தமிழகத்தின் அனுமதியின்றி எந்த கொம்பனாலும் மேகதாது அணையை கட்ட முடியாது... சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் உறுதி...
  • செந்தில் பாலாஜி அமைச்சராகவே தொடர்வார் என உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி வாதம்.... மனு தொடர்பாக வாதங்களை முன் வைத்துவிட்டு, பதிலளிக்க உத்தரவிடவில்லை என்ற செந்தில் பாலாஜி தரப்பின் வாதத்தை ஏற்க முடியாது என நீதிபதிகள் கண்டிப்பு....
  • நாடாளுமன்றத்தில் எம்.பி.,க்களின் சம்பளம் 24 சதவிகிதம் உயர்வு.... ஒரு லட்சம் ரூபாய் பெறும் எம்.பி.க்கள் இனி ஒரு லட்சத்து 24 ஆயிரம் ரூபாயை ஊதியமாக பெறுவார்கள் என அறிவிப்பு....
  • சென்னையில் யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் மலம், கழிவுநீரை ஊற்றி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு... சிலரது தூண்டுதலின் பேரில் தனது வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு... கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு....
  • சவுக்கு சங்கர் வீட்டில் தூய்மை பணியாளர்கள் போர்வையில் குண்டர் படை தாக்குதல் நடத்தியதற்கு ஈபிஎஸ் கண்டனம்....பின்னணியில் உள்ளவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தல்.....
  • திமுக ஆட்சியின் ஊழல், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை குறித்து பேசுவோர் மீது வழக்குப்பதிவு செய்வதற்கு அண்ணாமலை கண்டனம்.... ஆட்சியாளர்களின் அராஜகப்போக்கு தொடர்வது நல்லதல்ல என்றும் காட்டம்....
Tags:    

மேலும் செய்திகள்