டெல்லி சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், டெல்லியின் முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினருக்கான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக டெல்லி அரசின் சார்பில் பூஜாரி கிரந்தி சம்மான் என்ற திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார். இந்த திட்டத்தின் கீழ் கோவில் பூஜாரிகள் மற்றும் சீக்கிய குருத்வாராவில் பணியாற்றும் கிரந்திக்களுக்கு மாதந்தோறும் 18 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்தார். நாட்டிலேயே முதன் முறையாக இது போன்ற திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக குறிப்பிட்டார். இந்தத் திட்டத்திற்கான விண்ணப்ப பதிவு டெல்லி கன்நாட் பிளேஸ் பகுதியில் உள்ள ஹனுமன் ஆலயத்தில் நாளை துவங்கும் என தெரிவித்துள்ளார்.