திருச்சியில் மெட்ரோ ரயில்.. எதிர்பார்ப்பை கிளப்பும் அம்சங்கள் - வெளியான புதிய தகவல் | Trichy Metro
- சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில் இது குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், திருச்சியில் 68 கிலோமீட்டர் தொலைவில் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
- திருச்சியில் முக்கிய இடங்களில் மண் பரிசோதனை முடியும் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சமயபுரத்திலிருந்து ஸ்ரீரங்கம் வழியாக வயலூர் வரை 18.7 கிலோமீட்டர் தொலைவுக்கு ஒரு வழித்தடமும், துவாக்குடியிலிருந்து திருவெறும்பூர் வழியாக பஞ்சப்பூர் வரை 26 கிலோமீட்டர் தொலைவு இரண்டாவது வழித்தடமும், திருச்சி ஜங்சனிலிருந்து ஏர்போர்ட் வழியாக மாத்தூர் ரிங்ரோடு வரை 23 கிலோமீட்டர் தொலைவுக்கு 3-வது வழித்தடம் அமைக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
- இவற்றில் எங்கெங்கு நிறுத்தங்கள் அமையும் என்பது குறித்த விவரங்கள் விரிவான திட்ட அறிக்கையின் போது தெரியவரும் என்றும் இன்னும் இரு மாதங்களுக்குள் சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்படும் எனவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.