சென்னை கமிஷனர் ஆபீசுக்கு அரக்க பறக்க ஓடிவந்த மணிப்பூர் பெண் -திடுக்கிடும் தகவல்
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மணிப்பூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். அதில், ஏ.ஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அவருடைய ஆபாச வீடியோவை உருவாக்கி சைபர் கும்பல் மிரட்டியதாக தெரிவித்துள்ளார். மேலும், அந்த கும்பல், ஆண் நண்பருடன் நெருக்கமாக இருப்பது போன்று வீடியோ எடுத்து அனுப்ப வேண்டும்; இல்லையேல் ஆபாச வீடியோவை அனைவருக்கும் அனுப்பி விடுவதாக மிரட்டியுள்ளனர். நாடு முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவருடைய வழக்கறிஞர் தெரிவித்தார்.