தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் உள்ள அரசு போக்குவரத்து அலுவலகத்தை தனியார் பேருந்து உரிமையாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது தஞ்சையிலிருந்து கும்பகோணத்திற்கும் - திருச்சிக்கும் கால அட்டவணையின் வரிசைபடி பேருந்தை இயக்காமல் பாய்ண்ட் to பாய்ண்ட் என்கிற பெயரில் அரசு பேருந்தை அடுத்தடுத்து இயக்குவதால், தனியார் பேருந்து உரிமையாளர்கள் பாதிக்கப்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.