கள்ளக்காதலுக்கு இடையூறு.. சுத்தியலால் நசுக்கி கொல்லப்பட்ட பாட்டி.. ஊரே அலறிய கொ*ல

Update: 2025-04-16 03:46 GMT

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் பாட்டி, பேரன் இரட்டைக் கொலை வழக்கில் பொக்லைன் டிரைவர் மற்றும் கள்ளக்காதலி கைது செய்யப்பட்டுள்ளனர். மூதாட்டி சிக்கம்மா மற்றும் அவரது பேரன் ராகவன் ஆகிய இருவரும் சுத்தியலால் அடித்து கொல்லப்பட்டனர். போலீசார் விசாரணையில் பொக்லைன் டிரைவர் நாகேஷும் அப்பகுதியைச் சேர்ந்த பாக்யா என்பவரும் தகாத உறவில் இருந்ததும், இதற்கு சிக்கம்மா இடையூறாக இருந்ததால் இந்த சம்பவம் நிகழ்ந்திருப்பதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து சம்பவத்தில் தொடர்புடைய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்