Last எக்ஸாம் எழுதி முடித்ததும் பகை முடிக்க கிளம்பிய மாணவர்களுக்கு நேர்ந்த கதி
ராமநாதபுரத்தில் பத்தாம் வகுப்பு இறுதித்தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்த மாணவர்கள் முன்பகை காரணமாக தங்களுக்குள் மோதிக்கொண்டுள்ளனர். இதில் மூன்று மாணவர்கள் காயம் அடைந்து ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.