பாகிஸ்தானை உலுக்கிய அட்டாக்... பறிபோன உயிர்கள் - சிதறிய போலீஸ் வாகனம்...
பாகிஸ்தானில் உள்ள பலூசிஸ்தான் மாகாணத்தில் போலீசாரின் வாகனத்தை குறிவைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் மூன்று போலீசார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில் மேலும் 18 பேர் படுகாயம் அடைந்தனர். மஸ்துங் மாவட்டத்தில் நடந்த இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.