ஐ.என்.எஸ் விக்ராந்த் கப்பலின் கம்ப்யூட்டர்கள், ஹார்டிஸ்குகள் திருட்டு - இருவருக்கு பரபரப்பு தீர்ப்பு

கேரளாவில் இந்திய போர்கப்பலில் இருந்து கம்யூட்டரின் ஹார்ட் டிஸ்க் மற்றும் ஹார்டுவேரை திருடிய இரு நபர்களுக்கு என்ஐஏ நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது

Update: 2022-11-05 17:18 GMT

கொச்சியில் செயல்பட்டு வரும் கப்பல் கட்டும் தளத்தில், இந்தியா முதல் முறையாக ஐஎன்எஸ் விக்ராந்த் என்ற போர்கப்பலை உள்நாட்டிலேயே உருவாக்கி ராணுவத்தில் இணைத்தது. இக்கப்பலின் கட்டுமான பணியின் போது கம்யூட்டர் ரேம், 5 ஹார்ட் டிஸ்க்குகள் மற்றும் 5 ஹார்டுவேர்கள் திருடு போனது. இச்சம்பவத்தில் கிடைக்கப்பெற்ற கை ரேகை தடயம் ஒன்றை வைத்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை செய்து வந்தனர். விசாரணையில் பீகாரை சேர்ந்த சுமித் குமார் சிங் மற்றும் ராஜஸ்தானை சேர்ந்த தயா ரம் ஆகிய இருவர் குற்றத்தை ஒப்புக் கொண்ட நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், தற்போது என்ஐஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களில் பீகாரை சேர்ந்த சுமித் குமாருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், இரண்டாம் குற்றவாளியான ராஜஸ்தானை சேர்ந்த தயா ரம்மிற்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்