திருப்பதி இலவச தரிசனம் - தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Update: 2024-12-26 02:21 GMT

 திருப்பதி ஏழுமலையான் கோவில் சொர்க்கவாசல் பிரவேசத்திற்காக 9 இடங்களில் இலவச தரிசன டிக்கெட் கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஜனவரி மாதம் 10ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை 10 நாட்கள் ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறந்திருக்கும். அந்த நாட்களில் ஏழுமலையான வழிபட தேவையான இலவச தரிசன டிக்கெட் கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருப்பதி மலையில் ஒரு இடம் மற்றும் திருப்பதியில் எட்டு இடம் ஆக மொத்தம் மொத்தம் ஒன்பது இடங்களில் சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்