"தனது கைதுக்கு அல்லு அர்ஜுன் காரணமா? - பதிலளிக்க மறுக்கும் ஜானி | Allu Arjun | Johnny | Thanthi TV

Update: 2024-12-26 02:23 GMT

தனது கைதுக்கு அல்லு அர்ஜுன் தான் காரணம் என பரவி வரும் தகவலுக்கு பதிலளிக்க நடன இயக்குநர் ஜானி மறுத்துள்ளார். புஷ்பா பட சிறப்பு காட்சியின்போது கூட்ட நெரிசலில் சிக்கி ஐசியூவில் சிகிச்சை பெற்று வரும் சிறுவனை சந்தித்து ஜானி நலம் விசாரித்தார். ஏற்கனவே தன்னுடன் பணிபுரிந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் ஜானி கைதாகி ஜாமினில் விடுவிக்கப்பட்ட நிலையில், அவரது கைதுக்கு அல்லு அர்ஜுன்தான் காரணம் என தகவல் பரவியது. எனினும் இந்த கேள்விக்கு பதிலளிக்காமல் ஜானி நழுவி சென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்