வரிசை கட்டிய விடுமுறைகள் - வந்து குவிந்த மக்கள்.. சுற்றுலா தளங்களில் கூட்டம் | Thanthi TV
கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் அரையாண்டு தொடர் விடுமுறையையொட்டி, சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது...
மாமல்லபுரத்தில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்த நிலையில் புராதன சின்னங்களை கண்டுகளித்தனர். வென்னை உருண்டை பாறை, கடற்கரை கோயில், ஐந்தரதம், அர்ச்சுணன் தபசு உள்ளிட்ட இடங்களையும் கண்டுரசித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் காத்திருந்து அவர்கள் அரண்மனையை கண்டுரசித்தனர்.
இதே போல் திற்பரப்பு அருவியிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. சபரிமலை சீசன் என்பதால் ஏராளமான ஐயப்ப பக்தர்களும் அருவியில் நீராடினர்.
ஊட்டியில் கடந்த ஒரு வாரமாக கூட்டம் அதிகரித்து வந்த நிலையில், தற்போது அரையாண்டு விடுமுறையும் தொடங்கியதால் ஏராளமானோர் குவிந்தனர். அரசு தாவரவியல் பூங்காவை காண ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்ததால், பூங்கா நிரம்பி வழிந்தது.