இளம்பெண்ணிற்கு கிறிஸ்துமஸ் பரிசு வழங்கிய ராகுல் - இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ | Rahul Gandhi
கிறிஸ்துமஸ் தினத்தில் இளம்பெண்ணிற்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பரிசளித்த வீடியோவை காங்கிரஸ் கட்சி பகிர்ந்துள்ளது. ஹோட்டல் மேனேஜ்மென்ட் பயிலும் இளம்பெண் கோமலின் வீட்டிற்கு நேரில் சென்ற ராகுல் காந்தி, அவரது கல்வி குறித்தும், எதிர்கால கனவு குறித்தும் கேட்டறிந்தார். தான் படித்துவிட்டு சொந்தமாக பேக்கரி சுயதொழில் மேற்கொள்ளப்போவதாக கோமல் கூறியதை கேட்ட ராகுல் காந்தி, அவருக்கு MICROWAVE OVAN பரிசளித்தார். பின்னர் அதில் தான் தயார் செய்த இனிப்புகளை ராகுல் காந்திக்கு வழங்கி கோமல் மகிழ்ந்தார்.