திமுக பிரமுகரை சரமாரியாக வெட்டி கொலை... நீதிமன்றத்தில் சரணடைந்த 8 பேர்

Update: 2023-07-22 14:31 GMT

கொல்லம் பட்டறை பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் சரவணன் என்பவர், பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் நடத்திய விசாரணையில், இந்திய தேசிய லீக் கட்சி பிரமுகர் அல் ஆசிக் என்பவருக்கும் சரவணனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததும், இதன் காரணமாக சரவணனை கொலை செய்ததும் தெரியவந்தது. இந்நிலையில், அல் ஆசிக் உள்பட எட்டு பேர், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்கள் அனைவரையும் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்