இந்திய சினிமாக்களிலேயே புஷ்பா-2 படைத்த புது வரலாறு..| Allu Arjun | Rashmika Mandanna | Fahadh Faasil

Update: 2024-12-12 04:42 GMT

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ரஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான புஷ்பா-2 திரைப்படம், மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த வியாழக்கிழமை வெளியானது. முதல்நாள் வசூலாக 294 கோடி ரூபாய் வசூலை ஈட்டிய நிலையில், 6-வது நாள் முடிவில் சர்வதேச அளவில் ஆயிரம் கோடி ரூபாயை கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுவரை வெளியான இந்திய சினிமாக்களிலேயே இப்படம்தான் விரைவாக ஆயிரம் கோடி வசூலித்த படம் என்கிற சாதனையைப் படைத்துள்ளது. குறிப்பாக, படம் வெளியாவதற்கு முன்னதாகவே, ஓடிடி உரிமம், திரையரங்கு உரிமம் என இதுவரைக்கும் இல்லாத வகையில் அதிகமான தொகைக்கு விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Tags:    

மேலும் செய்திகள்