ரயிலை நோக்கி ஓடிய மாணவி... நேர இருந்த விபரீதம்... கடவுள் போல் வந்த கார் டிரைவர்

Update: 2024-12-12 04:35 GMT

தேர்வில் தோல்வி அடைந்த கல்லூரி மாணவி ரயில் முன் பாய்ந்து தற்கொ*ல செய்ய முயன்ற சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் கோவையில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரயில் நின்றது.அப்போது அதிலிருந்து இறங்கிய இளம் பெண் ஒருவர் வேகமாக ஓடிச் சென்று ரயில் முன் பாய்ந்து தற்கொ*ல செய்ய முயன்றார்.அப்போது அங்கே இருந்த கார் ஒட்டுநர் சுரேஷ் என்பவர் உடனடியாக விரைந்து சென்று மாணவியைக் காப்பாற்றி ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்து இருக்கிறார்.விசாரணையில் கல்லூரியில் படித்து வரும் மாணவி தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொ*லக்கு முயன்றது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மாணவியின் பெற்றோர்களுக்கு போலீசார் தகவல அளித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்