“கார்த்திகை தீபம் - மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை" - ஆட்சியர் அதிரடி..

Update: 2024-12-12 04:29 GMT

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் மலையேற தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மலை அதிக ஈரப்பதத்துடன் இருப்பதால், பாறைகள் உருளக்கூடிய அபாயம் உள்ளதாகவும், பக்தர்களுக்கு ஏற்படும் இன்னல் கருதி மலையேற தடை விதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தீபம் ஏற்றுபவர்கள் மட்டுமே மலைமீது ஏற அனுமதிக்கப்படுவார்கள் என்றும், பக்தர்கள் பிற பகுதியின் வழியாக செல்லாதவாறு தடுப்புகள் ஏற்படுத்தப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்