விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை அடுத்துள்ள பாளையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மங்கையன். கூலி தொழில் செய்து வரும் மங்கையனிடம் இருந்து அவரது மனைவி பிரிந்த சென்று இருக்கிறார். இந்த நிலையில் ஒரு மகள் உள்ள நிலையில் அவரை கவனித்து வந்து இருக்கிறார்.மங்கையனுக்கு தங்கை முறையுள்ள உறவுக்கார பெண்ணிடம் அதே பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் தகாத உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த மங்கையன் முத்துக்குமாருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்து இருக்கிறார். இந்த நிலையில் ஊர் அருகே உள்ள பகுதியில் எரிந்த நிலையில் சடலம் ஒன்று கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.