இந்தியா கூட்டணியின் தலைமை காங்கிரசின் கையில் உள்ள வேளையில், கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் மம்தா பானர்ஜி தலைமையேற்க வேண்டும் என கூறிவருகின்றன. இதில் காங்கிரசோடு நீண்ட கூட்டணி வரலாறு கொண்ட லாலு பிரசாத் யாதவும், சரத் யாதவும் மம்தாவை ஆதரிப்பது காங்கிரசுக்கு அதிர்ச்சியான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மம்தா பானர்ஜி இந்தியா கூட்டணியை வழிநடத்த தயார் என்று அறிவித்து இருந்தார். அதற்கு மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் சுபாங்கர் சர்க்கார், இந்தியா கூட்டணியின் பிளவை ஏற்படுத்த வேண்டும் என்ற பாஜக சதியின் ஒரு பகுதியே மம்தாவின் அறிக்கை என்று விமர்சித்தார். இப்போது இந்தியா கூட்டணியில் மம்தாவுக்கு ஆதரவு மேலோங்க, இந்தியா கூட்டணி குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை, ஆனால் எனக்கு ஆதரவு தெரிவித்த தலைவர்களுக்கு எல்லாம் நன்றி என மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.