"மகளிர் அதிக அளவில் பயணிப்பதால் கிராமங்களுக்கு பேருந்துகளின் பயணங்கள் குறைவு" - செங்கோட்டையன்
மகளிர் அதிக அளவில் பயணிப்பதால் கிராமங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளின் டிரிப்புகள் குறைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டியுள்ளார். போக்குவரத்து தொழிலாளர்களின் 14 வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை கண்டித்து, சத்தியமங்கலம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு, அண்ணா தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.சி. கருப்பணன் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது பேசிய செங்கோட்டையன், பெண்கள் அதிகம் பயணிப்பதால் கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளின் ட்ரிப்புகள் குறைக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டினார். போக்குவரத்து தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியது குறிப்பிடத்தக்கது.