சாயப்பட்டறைகளை சுத்தியலால் சாத்திய அதிகாரிகள் - நாமக்கல்லில் அதிரடி | Namakkal
சாயப்பட்டறைகளை சுத்தியலால் சாத்திய அதிகாரிகள் - நாமக்கல்லில் அதிரடி | Namakkal
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் அனுமதி இன்றி இயங்கிய ஆறு சாயப்பட்டறைகளை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், கட்டுமான கூலி தொழிலாளர்கள் உதவியுடன் சுத்தியால் அடித்து உடைத்தனர்.
இது குறித்து வந்த புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் இந்த நடவடிக்கை மேற்கொண்ட நிலையில், அவர்களிடம் சிறு சாயப்பட்டறை, உரிமையாளர்களின் பட்டறைகளை மட்டும் இடித்து வருவதாகவும், இதனால் விசைத்தறி தொழில் மட்டுமன்றி, சிறு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளின் இந்த தீவிர நடவடிக்கையின் போது, மணிமேகலை வீதி பகுதியில் செயல்பட்டு வரும் சாயப்பட்டறையில் இருந்து சிகப்பு நிறத்தில் சாயக்கழிவு நீர் சாக்கடை கால்வாய் வழியே வெளியேற்றப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.