புஷ்பா 2 விவகாரம் -திரை பிரபலங்களிடம் தெலங்கானா முதல்வர் கறார் | Pushpa 2 | Telangana |Revanth Reddy
திரைத்துறையினர் பொறுப்போடு செயல்பட வேண்டும் என்று தெலுங்கு திரை பிரபலங்களிடம் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கறாராக கூறியிருக்கிறார்.
ஐதராபாத்தில் புஷ்பா - 2 முதல் காட்சியில் கூட்ட நெரிசலால் பெண் உயிரிழந்ததை தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டது, அரசுக்கும், திரைத்துறைக்கும் இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் தெலங்கானா நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர் முதல்வர் ரேவந்த் ரெட்டியை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அரசு வழக்கம்போல் எப்போதும் திரையுலகத்திற்கு ஆதரவாக இருக்கும் என ரேவந்த் ரெட்டி உறுதியளித்துள்ளார். அதேவேளையில் திரைத்துறையினர் சமூக அக்கறை, பொறுப்பு ஆகியவற்றுடன் செயல்பட வேண்டும் என்றும் திரையுலக பிரபலங்கள் வெளியே வரும்போது ரசிகர்களை கட்டுப்படுத்துவது அவர்களுடைய பொறுப்பு, பிரபலங்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறோம் என்ற பெயரில் பவுன்சர்கள் செய்யும் வேலைகள் தீவிரமாக கவனிக்கப்படும் என்றும் ரேவந்த் ரெட்டி கறாராக கூறியிருக்கிறார்.