மெல்போனில் நடைபெறும் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து களமிறங்கினர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தில், இந்திய அணி வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்தபடி பீல்டிங் செய்தனர்.