"ஹாஸ்பிடலில் லேப் டெஸ்ட் எடுப்பதில்லை" - ஆத்திரத்தில் ஆட்சியர் சரமாரியாக கேள்வி | Namakkal
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற கூட்டத்தில் ஆட்சியர் உமா சரமாரியாக கேள்விகளை எழுப்பினார். ராசிபுரம் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நலச்சங்கம் ஆளும் குழுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா கலந்துகொண்டார். கூட்டத்தில் ராசிபுரம் மருத்துவமனையில் எடுக்கப்படும் லேப் டெஸ்ட் குறித்து ஆட்சியர் உமா கேள்வி எழுப்பினார். அதற்கு இங்கு லேப் டெஸ்ட் எடுக்கப்படுவதில்லை என மருத்துவர்கள் கூறிய நிலையில், சற்று டென்சனான ஆட்சியர் உமா, சரமாரியாக கேள்வி எழுப்பினார்.