பிரபல ரவுடி மீது பாய்ந்த போலீஸ் தோட்டா - காலையிலேயே பெரும் பதற்றம்

Update: 2024-12-27 02:46 GMT

ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையில் ரவுடி சுனிலை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.

ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான ஆனெக்கல் தாலுகா பண்டாபூர் அருகே உள்ள மடிவாளம் கிராமத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி சுனிலை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, அத்திப்பள்ளி காவல் நிலைய ஆய்வாளர் ராகவ் கவுடா தலைமையிலான போலீசார் ரவுடி சுனிலை பிடிக்க வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த ரவுடி சுனிலை போலீசார் பிடிக்க முயன்றபோது, சுனில் போலீசாரை தாக்கி விட்டு தப்பி செல்ல முயன்றுள்ளார். இதையடுத்து, காவல் ஆய்வாளர் ராகவ் தனது கை துப்பாக்கியால் ரவுடி சுனிலை சுட்டுள்ளார். இதில் காயமடைந்த சுனிலை போலீசார் மடக்கி கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்